ராமநவமி
3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி!
ராமநவமி நாளில்
ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும்
ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்..
விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்க!
ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே ||
இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும்.
3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி!
ராமநாமத்தை மூன்று முறை சொன்னால்
ஆயிரம் முறை சொன்னதாக அர்த்தம். இதற்கு காரணம் உண்டு. ராம என்ற சொல்லில்
ரகர வரிசையில் ரா இரண்டாவது எழுத்து. ம என்பது ப, ப, ப,ப, ம என்ற ஸ்வர
வரிசையில் ஐந்தாவது எழுத்து. இரண்டையும் பெருக்கினால் பத்து வரும். இதை
மும்முறை சொன்னால் 10*10*10 = 1000 முறை சொன்னதாக பொருள் கொள்ளலாம்.
ராமநவமி வரும் 31 . 3 .2012 அன்று காலை 9 .38 மணிக்கு நவமி ஆரம்பிக்கும்.
ராமநவமி வரும் 31 . 3 .2012 அன்று காலை 9 .38 மணிக்கு நவமி ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment