தத்தாத்ரேயர்
ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:
அத்ரி மகரிஷியின் மனைவி அனுசுயை. பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு இணையான ஒரு குழந்தையை பெற விரும்பி கடும் தவம் மேற்கொண்டாள். ஒரு சமயம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மூவரும் பதிவிரதையான அனுசுயையின் கற்பை சோதிக்க பிரம்மா, விஷ்ணு, சிவனை அனுப்பினார்கள். மும்மூர்த்திகளும் அனுசுயையிடம் சென்று அவர்களது உடலில் உடை ஏதும் இல்லாமல் தங்களுக்கு யாசகம் வேண்டினார்கள். இக்கட்டான இந்த சூழ்நிலையில் அனுசுயை தனது கணவனான அத்ரிமகரிஷியை மனதால் தியானித்து அவரது பாதங்களை நீரால் கழுவி அந்த நீரை மும்மூர்த்திகளின் மீது தெளித்தாள், உடனே மூவரும் பச்சிளம் குழந்தையாக மாறினார்கள். அதன்பின் உடையற்ற தன்மடி மீது அந்த குழந்தைகளை கிடத்தி பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்ரிமகரிஷி வீடு திரும்பியதும் மூன்று குழந்தைகளையும் அவர் பாதத்தில் கிடத்தினாள். மகரிஷியும் குழுந்தைகளை வாரி அணைத்தார். அணைத்த உடனே அந்த 3 குழந்தைகளும் இரண்டு கால்கள், ஒரு உடல், மூன்று தலைகள் மற்றும் 6 கைகளுடன் கூடிய உருவமாக மாறின. இந்த உருவமே தத்தாத்ரேயர் எனப்பட்டது. அனுசுயையின் விருப்பத்தை பூர்த்தி செய்யவே மும்மூர்த்திகளும் இவ்வாறு வந்தனர் எனக் கூறி மகரிஷி அனுசுயையை ஆசிர்வதித்தார். நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம். ஆன்மிக துளிகள். |
Saturday, 3 March 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment