பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. உத்திரத்திற்கு
தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது
பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார்,
மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த
பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
பங்குனி உத்திரத்தன்றுதான் நாமக்கல்லிலும் தேர்த்திருவிழா நடைபெறும்.
இலட்சுமி நரசிம்மரும் நாககிரித் தாயாரும் தம்பதி சமேதராய் தேரில் உலா
வருவர். இதே நன்னாளில் தான் சிதையின் கரத்தையும் பற்றினார் இராமர்.
பங்குனி உத்திரத்தில் பிரசன்னவெங்கடேசர், சித்திரா பவுர்ணமியில் கள்ளழகர், வைகாசி விகாசத்தில் கூடலழகர் என்று மூவரும் பவுர்ணமி நாளில் வைகையில் எழுந்தருள்வது சிறப்பு.
பங்குனி உத்திரத்தில் பிரசன்னவெங்கடேசர், சித்திரா பவுர்ணமியில் கள்ளழகர், வைகாசி விகாசத்தில் கூடலழகர் என்று மூவரும் பவுர்ணமி நாளில் வைகையில் எழுந்தருள்வது சிறப்பு.
பங்குனி உத்திரம் முருகனுக்கும் , பெருமாளுக்கும் இது உகந்த நாள் .
பங்குனி உத்திரம் ஏப்ரல் 5 ,2012 வருகிறது .
No comments:
Post a Comment