Sunday 25 March 2012

சித்திரைமாதத்தில்  சித்திரகுப்தர்

பூஜை

(Chitragupta Puja)

 

 பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். கயஷ்தா இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்த மகாராஜா விளங்குகின்றார்.


தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஷித்ரகுப்தர், யமன், ப்ரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம்

கோடாங்கிபட்டியில் இவருக்குசித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

 

  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
  •  

    சித்திரகுப்த மகாராஜா வருக ! வாழ்வில் அனைத்து வளங்கள் தருக!! என்று ஒரு பலகைள் எழுதி சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூஜை அறையல் வைத்து வழிபடல் மிக நன்று .

     இதுபோல செய்தால் நம் பாவ புனிய கணக்கு எல்லாம் சரியாய் இருக்கும் என்பது நம்பிக்கை.

     

     

     

     

     

     

     

 

No comments:

Post a Comment

Seriale online