Friday, 14 September 2012

உணவு  முறை:

  
உணவை பரிமாறும் போது தண்ணீர், இனிப்பு வகைகள், பொரியல், கூட்டு, அப்பளம், வடகம், துவையல், பழம், இவற்றை பரிமாறியபின் கடைசியில் தான் சாதம் பரிமாற வேண்டும்.
சாதத்தை முதலில் பரிமாற கூடாது.
 
 
 
கண் மை :


  
நம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்படும், கண் மை இடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்க்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நம் நாட்டு இயற்க்கை பொருட்களின் மதிப்பு என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண் மை, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், பெண்களின் கண்ணழகை அதிகப்படுத்தி காட்டவும் உபயோகிக்கப்படுகின்றன.
 இதில் மேலும் பல மறைக்கப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.
 கண் மை, இட்டுக் கொண்டால், பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.
செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்க பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த கண் மையை, நெற்றி பொட்டில் இட்டுக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.
வாழ்க்கை பின்பற்றுவது  சில முறைகள் 


குளியல்:

    
ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும்.
பல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.
குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் “கூழானாலும் குளித்து குடி”  என்று சொன்னார்கள்.
ஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்கள். அது மிகவும் அதிகமான தோஷத்தை கொடுக்கும். காலையிலேயே குளித்து விட வேண்டும்.
இன்னும் பல குடும்பங்களில், “இப்பவே குளிச்சிட்டு என்னத்த கிழிக்க போறீங்க?” என்று பாச மழை பொழியும் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பல ஆண்கள் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.


செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் – புதன் கிழமையன்றும், சனிக்கிழமையன்றும்
பெண்கள் – செவ்வாய்க்கிழமையன்றும், வெள்ளிக்கிழமையன்றும்
நல்லெண்ணைக்கு பதிலாக வேப்பெண்ணையை தேய்த்து குளிக்கலாம்.
 
 
 


Sunday, 1 July 2012

கருட பஞ்சமி விரதம்
 
பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் பண செழிப்பு இருக்கும். உடல்நலம் மேம்படும். வீட்டில் ஆரோக்கியம் நிலவும். இந்த விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பஞ்சமி திதி அன்று செய்ய வேண்டும். இந்த பூஜையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
 
இந்த பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி கோலம் போட வேண்டும். பின்னர் ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம், குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.
 
முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் தான் இந்த பஞ்சமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். இந்த பூஜையை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்குமாம். அதனை கண்டு தரிசிக்க வேண்டும்.
கருடன் வருவதால் இந்த பூஜைக்கு கருட பஞ்சமி விரதம் என்று பெயர் வந்தது.
 
இந்த விரதம் இருப்பவர்கள் கருட தரிசனம் கண்ட பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். 
 
 
 
சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமையும் தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்த இந்நாளில், சனி தசை நடப்பில் உள்ளவர்களும், ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களும், விநாயகரை இரவு 8 மணிக்கு பூர்ண மோதகம் படைத்து, இந்த அபூர்வத் துதியை 11 முறை கூறிட நலம் பெறலாம்.

“நல்லார் பழிப்பினெழிற் செம்ப-வனத்தை நாணா நின்ற

பொல்லா முகத்தெங்கள் போத-கமே புரமூன் றெரித்த

வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம் மகிழ

வல்லார் மனத்தன்றி மாட்டானி-ருக்க மலர்த்திருவே..”

சிவராத்திரி வழிபாடு செய்யும் முறை 

சிவராத்திரி தினத்தில் காலை, மாலை இரு வேளையும்

ஆலயம் சென்று சிவனை வழிபடுதல் நன்று.


வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.

 நியமப்படி பூஜை செய்பவர்கள் சிவராத்திரி இரவு

நான்கு சாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்


முறைப்படி பூஜிப்பவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய


பால், தயிர், நெய், கோமயம், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு


ஆகியவற்றை பயன்படுத்தலாம்.


கங்கை நீரால் அபிஷேகம் செய்தல் மிகவும் நல்லது.

 அபிஷேகம் ஆனதும் சந்தனம், அகில் குழம்பு, அரைத்த பச்சை கற்பூரம்,

அரைத்த குங்குமப்பூ ஆகியவற்றை லிங்கத்திருமேனியில் பூசலாம்


வில்வ இலை, வன்னி இலை, தாமரை மலர், செண்பகப்பூ, நந்தியாவட்டை


ஆகியவற்றால் இறைவனை பூஜித்தல் வேண்டும்.

 மல்லிகை, முல்லை ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம்

சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய


முதல் சாமத்துக்கு பச்சைபயறு பொங்கலும்,


இரண்டாம் சாமத்திற்கு பாயாசமும்,


மூன்றாம் சாமத்திற்கு எள் அன்னமும்,


நான்காம் சாமத்திற்கு சுத்தன்னமும் உகந்தவை


பஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, முட்கிளுவை, மாவிலங்கை,


விளா ஆகியவற்றைக் கொண்டு திருநீறு, மல்லிகை, முல்லை போன்ற


புஷ்பங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.


தேவாரம், திருவாசகம், திருவருட்பா, முதலான சிவபெருமானுக்கான


பக்திப்பாடல்கள் மற்றும் நாமாவளிகள் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை


பூஜையின்போது சொல்ல வேண்டும்.

 ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மட்டுமேகூட உச்சரிக்கலாம்.

சிவசிவ என்றால் கூட போதும்.

 சிவசிவ என தீவினை மாளுமே.சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :


சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது


ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.


இது மனதிற்கு தைரியத்தை தரும்.


எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.


இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,

 நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம்,

திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை


படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி


சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது


அவ்வாறு பூஜையைச் செய்து முடிக்க


முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும்


பூஜையைக்கண்டு களிக்கலாம்.


அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும்.


பகலில் உறங்கக்கூடாது.


இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும்


பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
சிவராத்திரி

1.யோக சிவராத்திரி

தேய்பிறை காலத்தில் சதுர்த்தசி திதியானது திங்கட்கிழமையில் வந்தால்

அது யோக சிவராத்திரி ஆகும்.

2.நித்திய சிவராத்திரி

பன்னிரண்டு மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி

நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி ஆகும்.

3.முக்கோடி சிவராத்திரி

மார்கழி மாதத்து சதுர்த்தசி திதியானது திருவாதிரை நட்சத்திரத்துடன்

கூடி வந்தால் அது மிகவும் உத்தமம்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது

செவ்வாய்க்கிழமையிலோ, ஞாயிற்றுக்கிழமையிலோ அமைவதும்

முக்கோடி சிவராத்திரி ஆகும்.

4.பட்ச சிவராத்திரி

தை மாதத்து தேய்பிறை பிரதமை திதி முதல் ஆரம்பித்து பதிமூன்று

நாட்களிலும் ஒரு வேலை உணவு உண்டு

பதினான்காம் திதியானது சதுர்த்தசி தினத்தில்

உபவாசம் இருத்தல் பட்ச சிவராத்திரி எனப்படும்.

5.மாத சிவராத்திரி

சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி,

வைகாசி மாதம் அஷ்டமி திதி,

ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி,

ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி,

ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி,

புரட்டாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி,

ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி,

கார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி,

மார்கழி மாதம் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி திதிகள்,

 தைமாதம் வளர்பிறை திருதியை திதி,

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி,

பங்குனி மாதம் வளர்பிறையில் திருதியை திதி,

ஆகியவை மாத சிவராத்திரி நாட்களாகும்.

6.மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் பெளர்ணமிக்குப்பின் தேய்பிறையில் பதினான்காவது

நாளாக வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ஆகும்

ஏகாதசி விரதம் மகிமை 

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது.
இந்த நாளில் விரதம் ஆரம்பித்து
தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்)
விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.
* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'' எனப்படும்.
பகையை வெல்ல உதவும்.
* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா'' எனப்படும்.
இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும்.
வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.
*
தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா'' எனப்படும்.
இன்று பழங்கள் தானம் செய்வதால்
ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும்.
அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர்.
மன உளைச்சல் அகலும்.
வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும்.
இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து
பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.
ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில்
எள்ளுடன் தானம் தர வேண்டும்.
மேலும் பாதுகை, கூடை, கரும்பு,
நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து
ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என
இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா'' எனப்படும்.
இந்த நாளில் 7 வகையான தானியங்களை
ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி
கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து
பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.
வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும்.
கணவனை பிரிந்துவாடும் நங்கைகள்
கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ'' எனப்படும்.
இன்று நெல்லி மரத்தடியில்
பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து
நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால்,
புண்ணிய நதிகளில் நீராடிய பலனும்,
ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.
* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா'' எனப்படும்.
நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும்.
திருமண யோகம் தரும்.
* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' எனப்படும்
பாபத்தை போக்கும்.
நல்ல பேற்றினை ஏற்படுத்தும்.
துரோகிகள் விலகுவர்.
* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ'' எனப்படும்.
உடல் சோர்வு நீக்கும்.
பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
ரத்த சோகை அகலும்.
வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ'' எனப்படும்.
உடல் ஆரோக்கியம் தரும்.
சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
*
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா'' என்று பெயர்.
பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி
பூஜை செய்வது ஆகும்.
எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும்
இணைத்து வழிபாடு செய்தால்
வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.
வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும்
. ஏனெனில் பீமன்வாயு அம்சம்.
* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா'' எனப்பெயர்படும்.
இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால்
ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும்,
கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும்,
பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும்
சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.
* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி'' எனப்படும்.
இஷ்ட நற்சக்திகளை தர வல்லது.
முன்னோர்களின் ஆசியையும்,
அவர்களது எதிர்பார்ப்புகளை
நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி'' என்று பெயர்.
இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு
வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய
கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா'' என்று பெயர்.
குழந்தைகள் கல்வியில் சிறக்கவும்
விரும்பிய மேல்படிப்பு அமையவும்,
சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.
* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா'' எனப்படும்.
இன்று விரதம் இருந்து
தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து
வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும்.
வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று
ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்
மன பயம் அகலும், மரண பயம் அகலும்,
கொடிய துன்பம் விலகும்.
ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள்
பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும்.
காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.
* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா'' எனப்படும்.
இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம்
இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள்.
நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில்
தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.
ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா'' என்று பெயர்.
அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து
இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று
பல்லாண்டுஅரசு செய்தான்.
எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால்
குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம்.
புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில்
கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).
* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா'' எனப்படும்
வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும்,
நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
*
ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா'' எனப் பெயர்
இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால்
அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால்
நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென
அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.
ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ'' என்று பெயர்.
கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது.
இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும்
பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால்
மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா'' என்பர்.
இன்று இருக்கும் விரதம்
இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.
* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா'' எனப்படும்.
கமலம் என்றாள் தாமரை.
தாமரை மலரில் இருந்து அருள் தரும்
அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால்
நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.
ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும்
தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்)
"மோட்ச ஏகாதசியில்'' உண்ணாமல்
அன்று முழுவதும் மட்டுமின்றி
முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து
செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம்.
அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.
சப்த கன்னிமார்கள்  ஸ்லோகம்  
 
 சப்தகன்னியரில் முதலாவதாக இருப்பவள் பிராம்மி
 
பிராம்மி:தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்

பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

பிராம்மி: மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:

ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

பிராம்மி: காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே

தேவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.


சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மகேஸ்வரி

மகேஸ்வரி:தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்

வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மகேஸ்வரி:மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:

ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

மகேஸ்வரி: காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


சப்தகன்னியரில் மூன்றாவது இருப்பவள் கவுமாரி.

குழந்தைச் செல்வம் வேண்டுவோர்

இவளை வழிபட நிச்சயம் குழந்தை பிறக்கும்.

கவுமாரி:தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை

பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி

பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா

மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்

ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள

கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

கவுமாரி: மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:

ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

கவுமாரி: காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

சப்த கன்னிகைகளில் நான்காவது இருப்பவள்

வைஷ்ணவி

.இவளை வழிபடுபவர்களுக்கு செல்வவளமும்,

தங்கமும் குவிந்து கொண்டே இருக்கும்.

வைஷ்ணவி:தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:

தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

வைஷ்ணவி:மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:

ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்


சப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.

இவளை வழிபட்டுவந்தால் பயம் நமக்குப்போகும்.

எதிரியே இல்லாத நிலையை நமக்கு உருவாக்குபவள்.


வராஹி:தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி:மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

வராஹி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


சப்தகன்னிகைகளில் ஆறாவதாக இருப்பவள் இந்திராணி.

இவளை ஒரு ஆண் வழிபட்டுக்கொண்டே இருந்தால்,

அவனுக்கு மிகச்சிறந்த மனைவி அமைவாள்.

ஒரு பெண் வழிபட்டுக்கொண்டே இருந்தால் அவளுக்கு

மிகச்சிறந்த கணவன் அமைவான்.

இதுவே இவளது சிறப்பு.

இந்திராணி:தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை

இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

இந்திராணி:மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:

ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

இந்திராணி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.


சப்தகன்னிகைகளில் ஏழாவதாக இருப்பவள் சாமுண்டி.

இவளது மறுபெயர் பத்திரகாளி.

முடியாத பிரச்னைகளை முடித்துவைக்கும்

சாமர்த்தியம் உடையவள்

சப்த கன்னிகைகளில் அதீதமான பலம் கொண்டவள்.

சாமுண்டி:தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை

முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா

சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.

நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே

நிஷண்ணசுவா!

ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா

சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

சாமுண்டி:மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:

ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

சாமுண்டி: காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

Saturday, 12 May 2012

தேய்பிறை அஷ்டமி 


தேய்பிறை அஷ்டமியன்று  ராகு காலத்தில்  அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை பெற  ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவர்கள். நாமும்  
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை போல் நாமும் வளமோடு வாழலாம் 

தேய்பிறை அஷ்டமி 13.5.2012 மாலை 4.30 - 6.00 மணி வரை ராகு நேரம் .

 

Thursday, 26 April 2012

சுகப்பிரவசம் நடைபெற 
ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம்
 
ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)
வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)
ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)
ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)
ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்:  (ஸ்ரீ)
இல்வாழ்க்கையில் இன்பம் பெற

  ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.


கல்யாண நடை  பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும். தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா ! 

துக்கம் விலக மந்திரம்

துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

குழந்தைப் பேறு உண்டாக
 


தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

 


விஷ்ணு மீது ப்ரியம் கொண்ட லக்ஷ்மி நினைத்து பாட சகல செல்வம் பெருகும்


 

Friday, 13 April 2012

ஸ்ரீவைபவலக்ஷ்மி பூஜை
 ஸ்ரீ வைபவலக்ஷ்மி விரத மகிமையால் பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். ஸ்ரீவைபவலக்ஷ்மி பூஜைக்கு கடுமையான நியமங்கள் தேவையில்லை என்றாலும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அகத்தூய்மையும் முக்கியம், மனதில் அன்பும், தயாள குணமும், பொறுமையும் இருந்தாலே பக்தி தானாக வந்து விடும். இத்தகைய பக்தியும், நம்பிக்கையும் கொண்டு செய்யும் பூஜை பல மடங்கு பலனைக் கொடுக்குமென்பது சத்தியம், ஸ்ரீமகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீவைபவலக்ஷ்மியைப் பூஜிப்பதால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இது அனுபவபூர்வமான உண்மை.

ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீவைபவலக்ஷ்மியாக வந்த கதையும், அதன் மகிமையும்

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது அதில் இருந்து செந்தாமரை மலரில் அமர்ந்த வண்ணம் ஸ்ரீமகாலட்சுமி அவதரித்தாள். அந்த மகாலட்சுமியே தேவர்களும், ரிஷிகளும் ஸ்தோத்ரம் செய்த மந்திரமே ஸ்ரீசூக்தம். கங்கை போன்ற புண்ணிய நதிகள் அம்மனை நீராட்டின அஷ்ட திக்கஜங்கள் தன் துதிக்கையால் நீரை நுகர்ந்து ஸ்ரீமகாலட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. திருப்பாற்கடல் பஞ்கஜ மாலையையும், திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது.

சூரியனின் மகன் ரேவந்தன் உச்சை சிரவஸ் என்ற குதிரையின் மேல் ஏறி திருமாலை வழிபட வைகுண்டம் வந்தான். (உச்சை சிரவஸ், பாற்கடலை கடையும் போது திருமகளோடு வெளிப்பட்டது) அந்த குதிரையை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அது சமயம் திருமால் மகாலட்சுமியிடம் இவன் யார்? என்று கேட்டார். தேவி பழைய ஞாபகத்தில் இருந்தால் கேள்விக்குப் பதில் கூறவில்லை. திருமால் கோபத்துடன் மகாலட்சுமியை நீபெண் குதிரையாக பூலோகத்தில் பிறப்பாயாக என்று சபித்து விட்டார். இதைப் பார்த்த ரேவந்தன் தூரத்தில் இருந்தபடி பெருமாளை வணங்கிவிட்டு சென்று விட்டான்.

காளிந்தி நதியும், தமஸாநதியும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீமகாலட்சுமி பெண் குதிரையாக அவதரித்தாள். சூரியனின் மனைவி உஷாதேவி தன் கணவனின் வெப்பம் (உக்ரம்) தாங்காமல் தன் நிழலை (சாயாதேவி) பெண்ணாக்கி விட்டு குதிரை வடிவில் காளிந்திநதியும், தமஸாநதியும் சந்திக்கும் இடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பெண் குதிரைவடிவில் இருந்த மகாலட்சுமி உஷா தேவியிடம். உன் கணவர் உன்னை வந்து சேருவார் உனக்காக தன் உக்ரத்தை குரைத்துக் கொண்டான் உங்களுக்கு அஷ்வினி தேவர்கள் குழந்தைகளாக பிறப்பார்கள் என்று வரமளித்தாள். 

ஸ்ரீமகாலட்சுமி இல்லாத வைகுண்டம் கலையிழந்து ரம்யமில்லாமல் காட்சியளித்தது. மகாவிஷ்ணு ஆண்குதிரை வடிவில், பெண்குதிரை வடிவில் இருக்கும் ஸ்ரீமகாலட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துப் போக வந்தார். இது சமயம் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு யயாதியின் மகன் துர்வசு பிள்ளை வரம் வேண்டிதவம் இருந்தான். மகாவிஷ்ணு அவனுக்கு தன்னிடம் உள்ள குழந்தையைக் கொடுக்கும்படி ஸ்ரீமகாலட்சுமியிடம் கூறினார். ஸ்ரீமகாலட்சுமி சம்மதிக்கவில்லை. அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியிடம் சந்தான வைபவத்தைக்கொடு என்றார். இதனால் வைபவலட்சுமி என பூலோகத்தில் உன்னை பூஜிப்பார் நான் உன்னைத் தேடி வந்தது போல் வைபவலட்சுமியான உன்னை பூஜிக்கும் பெண்கள் கணவனோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சாபங்கள், தோஷங்கள் நீங்கும். உன்னை பூஜிப்பவர்களுக்கு உன்னுடன் சேர்ந்து நானும் அருள் புரிவேன் என பல வரங்கள் கொடுத்தார். பின்னர் தங்கள் குழந்தையை துர்வஸுக்குக் கொடுத்து ஆசீர்வதித்து விட்டு இருவரும் வைகுண்டம் சென்றார்கள்.

விரதமகிமை: இந்தக் கதையை வெள்ளிக்கிழமைதோரும் விளக்கேற்றி வைத்து படித்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜை முடிந்தபின் உங்களால் இயன்ற அளவு (11,21,51 இதைவிட அதிக அளவிலும்) புத்தகங்களை வாங்கி அதனுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள்குங்குமம், தாலிச்சரடு ஒரு ரூபாய் நாணயம் வாழைப்பழம் ஆகிய மங்களப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும். புத்திரபாக்கியம், தாலி பாக்கியம், உடல் ஆரோக்கியம், உண்டாகும். வழக்குகள் வெற்றியடையும், மனதில் சந்தோசமும், நிம்மதியும் உண்டாகும். இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜையை ஜாதி மத பேதமின்றி எல்லோரும் செய்யலாம்.

இந்த பூஜையை குபேர தம்பதிகள் செய்ததால் அவர்களுக்கு சங்கநிதியும், பத்மநிதியும் கிடைத்தன. இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கி 11வது வெள்ளிக்கிழமை பூர்த்தி செய்வது விசேஷம் இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் கிடையாது. சுமங்களிகள் கூடியிருந்து பூஜை செய்யலாம்.

1. இந்த பூஜைக்கு இத்தனை வெள்ளிக்கிழமைகள் தான் என்பது இல்லை. பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறிய பின்னாலும் கூட நன்றி செலுத்தும் பொருட்டு பூஜையை தொடரலாம்.

2. பக்தர்கள் ஊர்ப்பயணம் மேற்கொள்ளும் போது ஸ்ரீவைபவ லட்சுமியின் படம் அல்லது தங்க நகைகளைக் கொண்டு இருந்த இடத்திலேயே இனிப்பு நைவேத்தியம் (வெல்லம்-சர்க்கரை-பழங்கள்) செய்தாலும் பலன் உண்டு.

பூஜைக்குரிய பொருட்கள்: ஸ்ரீவைபவ லட்சுமிபடம்,யந்திரம், வெள்ளி, பித்தளை -செம்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினால் செய்த குடம் அல்லது செம்பு - தீர்த்தம், அரிசி, தேன், மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், வெற்றிலைபாக்கு, பழம், புஸ்பம், ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, தேங்காய், தாலிச்சரடு, அர்ச்சனை செய்ய குங்குமம், புஸ்பம் அல்லது நாணயங்கள் - ஆசன பலகை ஆகியவை நைவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம்.

ஸ்ரீவைபவ லட்சுமி பூஜை
ஸ்ரீவைபவ லக்ஷ்மீக்குரிய வெள்ளிக்கிழமை விரதம் ஏற்றவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீவைபவ லக்ஷ்மிக்கு பூஜை செய்ய வேண்டும்.

ஸ்ரீ விக்னேச்வர பூஜை

(முதலில் விக்னேச்வர பூஜையைச் செய்த பிறகு ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜை செய்ய வேண்டும்)

(பூஜை ஆரம்பிக்கும்முன், கால் கைகள் சுத்தம் செய்த பின் ஆசமநம் செய்யவும். கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துக்கொண்டு)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே

ப்ரணாயாமம்

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம்,
ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந:
ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம்

மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்.

ததேவ லக்னம் ஸுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யா பலம் தைவ பலம் ததேவ
ஸ்ரீ லக்ஷ்மீபதே: (அ)ங்க்ரியுகம் ஸ்மராமி

கரிஷ்ய மாணஸ்ய கர்மண: நிர்விக்நேந பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌவிக்னேச்வர பூஜாம் கரிஷ்யே என்று அக்ஷதையை ஸங்கல்ப்பித்து வடக்கே போடவும்.

மஞ்சள் பிள்ளையார் மீது பூஜிக்கவும்

கணாநாம்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட்டாராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆநச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்.

அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸுமுகம் மஹாகணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.

பிறகு உபசார பூஜை

ஸ்ரீமஹாகணபதயே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: பாத்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: ஒளபசாரிக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: ஸ்நானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: வஸ்த்ரார்த்தம் அஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: அலங்காரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீமஹாகணபதயேநம: யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயேநம: கந்தான் (சந்தனம்) தாரயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீ மஹாகணபதயேநம: கந்தஸ்ய உபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)

ஸ்ரீமஹாகணபதயேநம: புஷ்பை: பூஜயாமி (புஷ்பம் அக்ஷதைகளையெடுத்து அர்ச்சிக்கவும்)

ஓம் ஸுமுகாய நம:          ஓம் தூமகேதவே நம:
ஓம் ஏகதந்தாய நம:          ஓம் கணாதயக்ஷõய நம:
ஓம் கபிலாய நம:             ஓம் ஃபாலசந்த்ராய நம:
ஓம் கஜகர்ணகாய நம:      ஓம் கஜாநநாய நம:
ஓம் லம்போதராய நம:     ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் விகடாய நம:             ஓம் சூர்ப்பகர்ணாய நம: 
ஓம் விக்ன ராஜாய நம:     ஓம் ஹேரம்பாய நம:ஓம் கணாபதிபாய நம:
      ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: நாநாவித பத்ர நம:

புஷ்பாணி ஸமர்ப்பயாமி

(பிறகு வெற்றிலை, பாக்கு, பழம் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும்)
ஸ்ரீ மஹாகணபதயே நம: கதளீஃபலம் நிவேதயாமி (வாழைப்பழம் நிவேதனம் செய்யவும்) பாநீயம் ஸமர்ப்பயாமி (உத்தரணியால் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் விடவும்)

வெற்றிலை, பாக்கு மீது ஒரு உத்தரணி தீர்த்தத்தை விடவும், தாம்பூலம் ஸமர்ப்பயாமி (என்று சொல்லி அக்ஷதை போடவும்)

ஸ்ரீ மஹாகணபதயே நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி (என்று கற்பூரம் காட்டவும்)

ப்ரார்த்தனை

வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா

(ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்யவும்)

ஸ்ரீமஹா கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹணாமி (என்று புஷ்பம் கொஞ்சம் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு அக்ஷதையை சிரசில் (தலையில்) போட்டுக் கொள்ளவும்.

பிறகு ஸ்ரீவைபவ லக்ஷ்மீக்கு (கலசத்தில்) பூஜையைச் செய்யவும்.

ஸ்ரீவைபவ லட்சுமி பூஜை

சுக்லாம் பரதாம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே

ப்ரணாயாமம்

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம்,
ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந:
ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம்

மமோபாக்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹுர்த்தே ஆத்ய ப்ரஹ்மண த்விதீய பரார்த்தே. ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வதமந்வந்தரே, அஷடாவிகும்சதி தமே கலியுகே. ப்ரதமே பாதே. ஜம்பூத்வீபே. பாரத வர்ஷே, பரதக்கண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே. அஸ்மிந்வர்த்தமாநே. வ்யாவஹாரிகே. ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... நாம ஸம்வதஸரே... அயநே... ருதௌ ... மாஸே... ப÷க்ஷ... யாம் (திதி) சபதிதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம்... நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்... (திதி) சுபதிதௌ (அவரவர்களுக்கு உரிய ப்ரார்த்தனைகளை வேண்டிக் கொள்ள வேண்டும்) மம சீக்ரமேவ விவாஹ ப்ராப்த்யர்த்தம், மம தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், மம பர்த்துச்ச அந்யோந்ய ப்ரீதி புரஸ்ஸரம் அவியோகார்த்தம். ஸத்புத்ர ஸகல ஸெளபாக்ய ஸித்யர்த்தம். லக்ஷ்மீ கடாக்ஷ அனுக்ரஹ ஸித்தியர்த்தம் இஷ்டகாம்யார்த்த ஸித்யார்த்தம் ஸ்ரீவைபவ லக்ஷ்மீ ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ வைபவ ப்ரஸாத ஸித்யர்த்தம் ஸ்ரீவைபவ லக்ஷ்மீ ப்ரஸாதாத் ஸகல சிந்தித மனோரதாவாப்த்யர்த்தம் ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜாம் கரிஷ்யே (என்று கூறி உத்தரணியால் சிறிது தீர்த்தத்தை எடுத்து கையை துடைத்துக் கொண்டு)

பிறகு விக்நேச்வராய நம: யதாஸ்தாநம் ப்ரதிஷ்டா பயாமி.

(என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்)


கலச பூஜை
 
பஞ்சபாத்திரத்தில் தீர்த்தம் நிரப்பி பாத்திரத்திற்கு சந்தனம் குங்குமமிட்டு ஒரு துளசி அல்லது புஷ்பத்தைத் தீர்த்தத்தில் போட்டு அதைக் கையால் மூடிக் கொண்டு,

கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ரஸமாச் ரித: மூலே:
தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸம்ருதா

குöக்ஷள து ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா:
ருக்வேதோ(அ)த யஜுர்வேத: ஸாமவேதோ(அ) ப்யதர்வண:

அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா
ஆயாந்து தேவி பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

கங்கே ச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரீ ஜலே(அ) ஸ்மிந் ஸந்நிதம்குரு

(என்று கூறி துளஸி அல்லது கலச புஷ்பத்தால் தன்னையும், பூஜா திரவியங்களையும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்)

கண்டா பூஜை

ஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்சநம்

(என்று கூறி மணியை அடிக்கவும், பிறகு கையில் புஷ்பம், அக்ஷதை கொஞ்சம் எடுத்துக் கொண்டு)

த்யானம்

யா ரக்தாம்புஜ வாஸினீ விலாஸினீ சண்டாம்சு தேஜஸ்வினீ
யா ரக்தா ருதிராம்பரா ஹரிஸகீ யா ஸ்ரீமனோஹ்லாதினீ
யா ரத்னாகர மந்தனாத் ப்ராகன்டிதா விஷ்ணோஸ்வயாகேஹினீ
ஸா மாம் பாது மனோரமா பகவதீ லக்ஷ்மீச்ச பத்மாவதீ

ஸரஸிஜ நயனே ஸரோஜ ஹஸ்தே
தவளதராம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதகரி ப்ரஸீத மஹ்யம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: த்யாயாமி (என்று கூறி புஷ்பாக்ஷதைகளை கும்பத்தில் யந்திரத்தில் ஸமர்ப்பிக்கவும்)

ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் அஹம் பஜே
ஆவாஹயாம்யஹம் லக்ஷ்மீம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயீநீம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: ஆவாஹயாமி (என்று கூறி புஷ்பாக்ஷதைகளை கும்பத்தில் யந்திரத்தில் ஸமர்ப்பிக்கவும்)

கங்காதி ஸர்வ தீர்த்தேப்யோ மயா ப்ரார்த்தநயாஹ்ருதம்
தோயம் ஏதத் ஸுகஸ்பர்சம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

அஷ்டகந்த ஸமாயுக்தம் ஸ்வர்ண பாத்ர ப்ரபூஜிதம்
அர்க்யம் க்ருஹாண மத் தத்தம் மஹாலக்ஷ்ம்யை நமோ அ(எ)ஸ்து தே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மூன்று முறை கிண்ணத்தில் விடவும்)

கற்பூரேண ஸுகந்தேந ஸுரபி ஸ்வாது சீதளம்
தோயம் ஆசமநீயார்த்தம் தேவி த்வம் ப்ரதிக்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மூன்று முறை கிண்ணத்தில் விடவும்)

மதுபர்க்கம் மயா தேவி காஞ்சீ நூபுர சோபிதே
ஸ்வீக்ருத்ய தயயா தேவி குருமஹம் து மங்களம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (மூன்று சொட்டு தேனை கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

பஞ்சாம்ருதம் இதம் திவ்யம் பஞ்சபாதக நாசநம்
பஞ்ச பூதாத்மகே தேவி பாஹி ஸ்வீக்ருத்ய சங்கரீ 

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி (பஞ்சாம்ருதத்தை அபிஷேகம் செய்வது போல் பாவித்து சிறிதளவு கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

ஸ்நாஸ்யதாம் பாபநாசாய யா ப்ரவ்ருத்த ஸுராபஹா
மயார்பிதாத்வம் க்ருஹ்ணீஷ்வ ப்ரீதா பவ தயாநிதே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: கத்தோதகஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்தத்தை உத்தரணியில் எடுத்து கிண்ணத்தில் விடவும்)

ஸர்வ பூஷாதிகே ஸெளம்யே லோக லஜ்ஜா நிவாரணே
வாஸஸி ப்ரதி க்ருஹ்யேதாம் மயா துப்யம் ஸமர்ப்பிதே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (கும்பம் அல்லது யந்திரத்தில் அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்) அல்லது ரவிக்கைத் துணியும் சாற்றலாம்.

ஸ்ரீ கண்ட சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபநம் ஸுரச்ரேஷ்ட்டே ப்ரீத்யர்த்தம் ப்ரதி க்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: கந்தாத் தாரயாமி கந்தஸ்ய உபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி (கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் ஸமர்ப்பிக்கவும்)

மாங்கலிய மணி ஸம்யுக்தம் முக்தா வித்ரும ஸம்யுக்தம்
தத்தம் மங்கள ஸூத்ரஞ்ச க்ருஹாண ஹரி வல்லபே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: மங்கள ஸுத்ரம் ஸமர்ப்பயாமி (மங்கள ஸுத்ரம் - மஞ்சள் கயிறு ஸமர்ப்பிக்கவும்)

ரத்ந கங்கண வைடூர்ய முக்தா ஹாராதிகாநி ச
ஸுப்ரஸந்நேந மநஸா தத்தாநி த்வம் க்ருஹாண மே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி (வெள்ளி, பவுன் முதலிய ஆபரணங்களை ஸமர்ப்பிக்கவும்) ( அவரவர் சக்திக்கேற்றபடி)

ஜாதீ சம்பக புந்நாக கேதீக வகுளாநி ச
மயார்ப்பிதாநி ஸுபகே க்ருஹாண ஜகதம்பிகே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி (புஷ்பங்களை போடவும்)

அங்க பூஜை

ஓம் ஸபலாயை  நம: பாதௌ (பாதம்) பூஜயாமி
ஓம் ஸஞ்சலாயை நம: ஜாநூ (முழங்கால்) பூஜயாமி
ஓம் கமலாயை நம: கடிம்  (இடுப்பு) பூஜயாமி
ஓம் காத்யாயிந்யை நம: நாபிம் (நாபி)  பூஜயாமி
ஓம் ஜகன் மாதரே நம: ஜடரம் (வயிறு) பூஜயாமி
ஓம் விஷ்ணு வல்லபாயை நம: வக்ஷஸ்தலம் (மார்பு) பூஜயாமி
ஓம் கமல வாஸிந்யை நம: புஜத்வயம் (புஜங்கள் தோள்) பூஜயாமி
ஓம் பத்மநிலயாயை நம: முகம் (முகம்) பூஜயாமி
ஓம் கமலபத்ராக்ஷ்யை நம: நேத்ரத்வயம் (கண்கள்)  பூஜயாமி
ஓம் ச்ரியை நம: சிர (சிரஸ்) பூஜயாமி
ஓம் ஸ்ரீவைபவ லக்ஷ்ம்யை நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி

ஸ்ரீவைபவ லக்ஷ்மி விசேஷ அர்ச்சனை

(குங்குமம் அல்லது மஹாலக்ஷ்மி வெள்ளி, செம்பு காசுகளால் அர்ச்சனை செய்யவும்)

ஸ்ரீ பார்வதீ ஸரஸ்வதீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கமலே விமலே தேவி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காருண்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தாரித்ரிய துக்க சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீதேவீ நித்ய கல்யாணீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸமுத்ர தனயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜ லக்ஷ்மீ ராஜ்ய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வீர லக்ஷ்மீ விஜய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மூக ஹந்த்ரீ மந்த்ரரூபாயை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

மஹிஷாஸுர ஸம்ஹர்த்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வைகுண்ட ஸ்ருதயாவாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்ஷீந்த்ர வாஹனே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தான்யரூபே தான்யலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்வர்ணரூபே ஸ்வர்ண மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வித்தரூபே வித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வித்யாரூபே வித்லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹரிப்ரியே வேதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ஃபலரூபே ஃபல தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நிஸ்துலே நிர்மலே நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரத்னரூபே ரத்னலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
க்ஷüரரூபே க்ஷüரதாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதரூபே நாதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ராணரூபே ப்ராண மூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ப்ரணவானந்த மஹாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மரூபே ப்ரஹ்ம தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஜாதவேத ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆதார சுல்க நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ஸுஷும்னா ஸுஷிராந்தஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
யோகாநந்த ப்ரதாயின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸெளந்தர்ய ரூபிணீ தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸித்தலக்ஷ்மீ ஸித்தரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ ஸந்தோஷஸத்ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
துஷ்டிதே புஷ்டிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜ ராஜார்ச்சித பதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸாரஸ்வரூபே திவ்யாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சாரித்ர்ய திவ்ய சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதகுஹ்யே சுபே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

தர்மார்த்த காமரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மோக்ஷ ஸாம்ராஜ்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ கம்யே ஸர்வரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மோஹனீ மோஹ ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பஞ்சபூதாந்தராளஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாராயண ப்ரியதமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காரணீ கார்யரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அனந்த தல்ப சயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
லோகைக ஜனனீ வந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சம்புரூபே சம்புமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ப்ரஹ்மரூபே ப்ரஹ்மமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுரூபே விஷ்ணுமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆஜ்ஞா சக்ராப்ஜ நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹகாரரேஃப சக்த்யாபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹ்ருதயாம்புஜ தீபாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுக்ரந்தி விசாலாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆதாரமூல நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மக்ரந்தி ப்ரகாசாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
குண்டலீ சயநானந்தீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஜீவாத்ம ரூபிணீ மாதா மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரகாசஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அச்வத்த வ்ருக்ஷ ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காருண்ய பூர்ணே ஸ்ரீதேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மூர்த்தி த்ரய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸூர்ய ப்ரகாச ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சந்த்ர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பீதாம்பரதரே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
திவ்யாபரண சோபாட்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ப்ராஹ்மணாராதிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாரஸிஹ்மீ க்ருபாஸிந்தோ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வரதே மங்களே மான்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பத்மாடவீ நிலயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வ்யாஸாதி திவ்யஜ்ஞ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ஜயலக்ஷ்மீ ஸித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜமுத்ரே விஷ்ணுமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வார்த்த ஸாதகீ நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

மஹதீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரதிரூபே ரம்யரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காமாங்கீ காமஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸுதாபூர்ணே ஸுதாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
இந்த்ர வந்த்யே தேவலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஷ்டைச்வர்ய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தர்மராஜ ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ர÷க்ஷõவரபுரீ லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரத்னாகர ப்ரபாரம்போ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மருத்புர மஹானந்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

குபேர லக்ஷ்மீ மாதங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஈசான லக்ஷ்மீ ஸர்வேசீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மபீடே மஹாபீடே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மாயா பீடஸ்திதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீசக்ர வாஸிநீ கன்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஷ்டபைரவ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஸிதாங்க பூரீ நாதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸித்தலக்ஷ்மீ மஹாவித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
புத்தீந்த்ரியாதி நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரோக தாரித்ர்ய சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ம்ருத்யு ஸந்தாப நாசின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பதிப்ரியே பதிவ்ரதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சதுர்புஜே கோமளாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்ஷ்ரூபே புக்தி தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸதானந்தமயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்திப்ரியே பக்திகம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்தோத்ரப்ரியே ரமேராமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராமநாம ப்ரியே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கங்கா ப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விச்வ பர்த்ரீ விச்வமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

க்ருஷ்ண ப்ரியே க்ருஷ்ண ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கீதரூபே ராகமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸாவித்ரீ பூத ஸாவித்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காயத்ரீ ப்ரஹ்ம காயத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மீ ஸரஸ்வதி தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சுகலாபினீ சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வீணாதர ஸ்தோத்ர கம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆஜ்ஞாகரீ ப்ராஜ்ஞவந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதாங்கவன ஸாராங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாதாந்த ரஸபூயிஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

திவ்யசக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ந்ருத்தப்ரியே ந்ருத்த லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
சது: ஷஷ்டி கலாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ மங்கள ஸம்பூரணே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
திவ்ய கந்தாங்க ராகாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
முக்திதே முக்தி தேஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
யஜ்ஞஸாரார்த்த சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

உத்தராங்க பூஜை

வநஸ்பதி ரஸோத்பந்தோ கந்தாட்யோ கந்த உத்தமம்
ஆக்ரேயஸ் ஸர்வ தேவானாம் தூபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம : தூபம் ஆக்ராபயாமி (ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்டவும்)

கற்பூர வர்த்தி ஸம்யுக்தம் க்ருதயுக்தம் மநோஹரம்
தமோ நாசகரம் தீபம் க்ருஹாண பரமேச்வரி

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: தீபம் தர்சயாமி தீபத்தை காட்டவும்)

பிறகு நைவேத்யம்சர்க்கரை பொங்கல், தேங்காய், வாழைப்பழம், தாம்பூலம் முதலிய நைவேத்ய பதார்த்தங்களை ஒரு உத்தரணி தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து, 

பஹுபக்ஷ்ய ஸமாயுக்தம் நாநாஃபல ஸமந்விதம்
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி நாராயண குடும்பிநீ

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: குடான்னம் நாளிகேர கண்டம். கதலீஃபலம், 
தாம்பூலம் நைவேத்யம் ஸமர்ப்பயாமி நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (என்று தீர்த்தத்தை மூன்று முறை கிண்ணத்தில் விடவும்)

நீராஜநம் நீரஜாக்ஷீ நாராயண விலாஸிநீ
க்ருஹ்யதாமர்ப்பிதம் பக்த்யா கருடத்வஜ பாமிநீ

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி

யாநி காநிச பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

என்று கூறி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.
பிறகு ஆரத்தி எடுக்கவும், அஸ்மாத் கும்பாத் ஸ்ரீ வைபவ லக்ஷ்மீம் உத்யாபயாமி என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் ஸமர்பித்து கலசத்தை சிறிது வடக்கு பக்கம் நகர்த்தி வைக்கவும்.

கலச தீர்த்தத்தை தான் சிறிதளவு உட்கொண்டு ப்ரோக்ஷித்துக் கொண்டு வீடு முழுவதும் ப்ரோக்ஷித்து வந்தவர்களுக்கும் தீர்த்தமாகக் கொடுத்து மீதியை துளசிச் செடியிலோ, கிணற்றிலோ ஊற்றவும்.


ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜை ஸம்பூர்ணம்.
Seriale online