Sunday, 1 July 2012

கருட பஞ்சமி விரதம்
 
பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் பண செழிப்பு இருக்கும். உடல்நலம் மேம்படும். வீட்டில் ஆரோக்கியம் நிலவும். இந்த விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பஞ்சமி திதி அன்று செய்ய வேண்டும். இந்த பூஜையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
 
இந்த பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி கோலம் போட வேண்டும். பின்னர் ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம், குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.
 
முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் தான் இந்த பஞ்சமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். இந்த பூஜையை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்குமாம். அதனை கண்டு தரிசிக்க வேண்டும்.
கருடன் வருவதால் இந்த பூஜைக்கு கருட பஞ்சமி விரதம் என்று பெயர் வந்தது.
 
இந்த விரதம் இருப்பவர்கள் கருட தரிசனம் கண்ட பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். 
 
 
 
சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமையும் தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்த இந்நாளில், சனி தசை நடப்பில் உள்ளவர்களும், ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களும், விநாயகரை இரவு 8 மணிக்கு பூர்ண மோதகம் படைத்து, இந்த அபூர்வத் துதியை 11 முறை கூறிட நலம் பெறலாம்.

“நல்லார் பழிப்பினெழிற் செம்ப-வனத்தை நாணா நின்ற

பொல்லா முகத்தெங்கள் போத-கமே புரமூன் றெரித்த

வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம் மகிழ

வல்லார் மனத்தன்றி மாட்டானி-ருக்க மலர்த்திருவே..”

சிவராத்திரி வழிபாடு செய்யும் முறை 

சிவராத்திரி தினத்தில் காலை, மாலை இரு வேளையும்

ஆலயம் சென்று சிவனை வழிபடுதல் நன்று.


வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.

 நியமப்படி பூஜை செய்பவர்கள் சிவராத்திரி இரவு

நான்கு சாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்


முறைப்படி பூஜிப்பவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய


பால், தயிர், நெய், கோமயம், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு


ஆகியவற்றை பயன்படுத்தலாம்.


கங்கை நீரால் அபிஷேகம் செய்தல் மிகவும் நல்லது.

 அபிஷேகம் ஆனதும் சந்தனம், அகில் குழம்பு, அரைத்த பச்சை கற்பூரம்,

அரைத்த குங்குமப்பூ ஆகியவற்றை லிங்கத்திருமேனியில் பூசலாம்


வில்வ இலை, வன்னி இலை, தாமரை மலர், செண்பகப்பூ, நந்தியாவட்டை


ஆகியவற்றால் இறைவனை பூஜித்தல் வேண்டும்.

 மல்லிகை, முல்லை ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம்

சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய


முதல் சாமத்துக்கு பச்சைபயறு பொங்கலும்,


இரண்டாம் சாமத்திற்கு பாயாசமும்,


மூன்றாம் சாமத்திற்கு எள் அன்னமும்,


நான்காம் சாமத்திற்கு சுத்தன்னமும் உகந்தவை


பஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, முட்கிளுவை, மாவிலங்கை,


விளா ஆகியவற்றைக் கொண்டு திருநீறு, மல்லிகை, முல்லை போன்ற


புஷ்பங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.


தேவாரம், திருவாசகம், திருவருட்பா, முதலான சிவபெருமானுக்கான


பக்திப்பாடல்கள் மற்றும் நாமாவளிகள் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை


பூஜையின்போது சொல்ல வேண்டும்.

 ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மட்டுமேகூட உச்சரிக்கலாம்.

சிவசிவ என்றால் கூட போதும்.

 சிவசிவ என தீவினை மாளுமே.சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :


சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது


ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.


இது மனதிற்கு தைரியத்தை தரும்.


எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.


இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,

 நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம்,

திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை


படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி


சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது


அவ்வாறு பூஜையைச் செய்து முடிக்க


முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும்


பூஜையைக்கண்டு களிக்கலாம்.


அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும்.


பகலில் உறங்கக்கூடாது.


இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும்


பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
சிவராத்திரி

1.யோக சிவராத்திரி

தேய்பிறை காலத்தில் சதுர்த்தசி திதியானது திங்கட்கிழமையில் வந்தால்

அது யோக சிவராத்திரி ஆகும்.

2.நித்திய சிவராத்திரி

பன்னிரண்டு மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி

நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி ஆகும்.

3.முக்கோடி சிவராத்திரி

மார்கழி மாதத்து சதுர்த்தசி திதியானது திருவாதிரை நட்சத்திரத்துடன்

கூடி வந்தால் அது மிகவும் உத்தமம்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது

செவ்வாய்க்கிழமையிலோ, ஞாயிற்றுக்கிழமையிலோ அமைவதும்

முக்கோடி சிவராத்திரி ஆகும்.

4.பட்ச சிவராத்திரி

தை மாதத்து தேய்பிறை பிரதமை திதி முதல் ஆரம்பித்து பதிமூன்று

நாட்களிலும் ஒரு வேலை உணவு உண்டு

பதினான்காம் திதியானது சதுர்த்தசி தினத்தில்

உபவாசம் இருத்தல் பட்ச சிவராத்திரி எனப்படும்.

5.மாத சிவராத்திரி

சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி,

வைகாசி மாதம் அஷ்டமி திதி,

ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி,

ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி,

ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி,

புரட்டாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி,

ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி,

கார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி,

மார்கழி மாதம் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி திதிகள்,

 தைமாதம் வளர்பிறை திருதியை திதி,

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி,

பங்குனி மாதம் வளர்பிறையில் திருதியை திதி,

ஆகியவை மாத சிவராத்திரி நாட்களாகும்.

6.மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் பெளர்ணமிக்குப்பின் தேய்பிறையில் பதினான்காவது

நாளாக வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ஆகும்

ஏகாதசி விரதம் மகிமை 

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது.
இந்த நாளில் விரதம் ஆரம்பித்து
தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்)
விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.
* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'' எனப்படும்.
பகையை வெல்ல உதவும்.
* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா'' எனப்படும்.
இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும்.
வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.
*
தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா'' எனப்படும்.
இன்று பழங்கள் தானம் செய்வதால்
ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும்.
அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர்.
மன உளைச்சல் அகலும்.
வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும்.
இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து
பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.
ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில்
எள்ளுடன் தானம் தர வேண்டும்.
மேலும் பாதுகை, கூடை, கரும்பு,
நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து
ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என
இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா'' எனப்படும்.
இந்த நாளில் 7 வகையான தானியங்களை
ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி
கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து
பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.
வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும்.
கணவனை பிரிந்துவாடும் நங்கைகள்
கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ'' எனப்படும்.
இன்று நெல்லி மரத்தடியில்
பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து
நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால்,
புண்ணிய நதிகளில் நீராடிய பலனும்,
ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.
* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா'' எனப்படும்.
நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும்.
திருமண யோகம் தரும்.
* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' எனப்படும்
பாபத்தை போக்கும்.
நல்ல பேற்றினை ஏற்படுத்தும்.
துரோகிகள் விலகுவர்.
* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ'' எனப்படும்.
உடல் சோர்வு நீக்கும்.
பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
ரத்த சோகை அகலும்.
வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ'' எனப்படும்.
உடல் ஆரோக்கியம் தரும்.
சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
*
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா'' என்று பெயர்.
பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி
பூஜை செய்வது ஆகும்.
எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும்
இணைத்து வழிபாடு செய்தால்
வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.
வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும்
. ஏனெனில் பீமன்வாயு அம்சம்.
* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா'' எனப்பெயர்படும்.
இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால்
ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும்,
கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும்,
பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும்
சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.
* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி'' எனப்படும்.
இஷ்ட நற்சக்திகளை தர வல்லது.
முன்னோர்களின் ஆசியையும்,
அவர்களது எதிர்பார்ப்புகளை
நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி'' என்று பெயர்.
இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு
வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய
கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா'' என்று பெயர்.
குழந்தைகள் கல்வியில் சிறக்கவும்
விரும்பிய மேல்படிப்பு அமையவும்,
சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.
* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா'' எனப்படும்.
இன்று விரதம் இருந்து
தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து
வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும்.
வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று
ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்
மன பயம் அகலும், மரண பயம் அகலும்,
கொடிய துன்பம் விலகும்.
ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள்
பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும்.
காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.
* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா'' எனப்படும்.
இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம்
இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள்.
நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில்
தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.
ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா'' என்று பெயர்.
அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து
இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று
பல்லாண்டுஅரசு செய்தான்.
எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால்
குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம்.
புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில்
கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).
* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா'' எனப்படும்
வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும்,
நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
*
ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா'' எனப் பெயர்
இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால்
அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால்
நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென
அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.
ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ'' என்று பெயர்.
கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது.
இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும்
பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால்
மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா'' என்பர்.
இன்று இருக்கும் விரதம்
இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.
* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா'' எனப்படும்.
கமலம் என்றாள் தாமரை.
தாமரை மலரில் இருந்து அருள் தரும்
அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால்
நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.
ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும்
தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்)
"மோட்ச ஏகாதசியில்'' உண்ணாமல்
அன்று முழுவதும் மட்டுமின்றி
முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து
செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம்.
அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.
சப்த கன்னிமார்கள்  ஸ்லோகம்  
 
 சப்தகன்னியரில் முதலாவதாக இருப்பவள் பிராம்மி
 
பிராம்மி:தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்

பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

பிராம்மி: மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:

ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

பிராம்மி: காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே

தேவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.


சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மகேஸ்வரி

மகேஸ்வரி:தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்

வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மகேஸ்வரி:மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:

ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

மகேஸ்வரி: காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


சப்தகன்னியரில் மூன்றாவது இருப்பவள் கவுமாரி.

குழந்தைச் செல்வம் வேண்டுவோர்

இவளை வழிபட நிச்சயம் குழந்தை பிறக்கும்.

கவுமாரி:தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை

பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி

பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா

மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்

ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள

கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

கவுமாரி: மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:

ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

கவுமாரி: காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

சப்த கன்னிகைகளில் நான்காவது இருப்பவள்

வைஷ்ணவி

.இவளை வழிபடுபவர்களுக்கு செல்வவளமும்,

தங்கமும் குவிந்து கொண்டே இருக்கும்.

வைஷ்ணவி:தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:

தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

வைஷ்ணவி:மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:

ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்


சப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.

இவளை வழிபட்டுவந்தால் பயம் நமக்குப்போகும்.

எதிரியே இல்லாத நிலையை நமக்கு உருவாக்குபவள்.


வராஹி:தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி:மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

வராஹி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


சப்தகன்னிகைகளில் ஆறாவதாக இருப்பவள் இந்திராணி.

இவளை ஒரு ஆண் வழிபட்டுக்கொண்டே இருந்தால்,

அவனுக்கு மிகச்சிறந்த மனைவி அமைவாள்.

ஒரு பெண் வழிபட்டுக்கொண்டே இருந்தால் அவளுக்கு

மிகச்சிறந்த கணவன் அமைவான்.

இதுவே இவளது சிறப்பு.

இந்திராணி:தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை

இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

இந்திராணி:மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:

ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

இந்திராணி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.


சப்தகன்னிகைகளில் ஏழாவதாக இருப்பவள் சாமுண்டி.

இவளது மறுபெயர் பத்திரகாளி.

முடியாத பிரச்னைகளை முடித்துவைக்கும்

சாமர்த்தியம் உடையவள்

சப்த கன்னிகைகளில் அதீதமான பலம் கொண்டவள்.

சாமுண்டி:தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை

முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா

சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.

நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே

நிஷண்ணசுவா!

ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா

சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

சாமுண்டி:மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:

ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

சாமுண்டி: காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்
Seriale online