கருட பஞ்சமி விரதம்
பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும்.
மேலும் குடும்பத்தில் பண செழிப்பு இருக்கும். உடல்நலம் மேம்படும். வீட்டில்
ஆரோக்கியம் நிலவும். இந்த விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பஞ்சமி திதி
அன்று செய்ய வேண்டும். இந்த பூஜையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இந்த
பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால்
சிறப்பு. பூஜை செய்யும் இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி கோலம் போட வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம்,
குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.
முதலில்
விநாயகரை வழிபட்டு பின்னர் தான் இந்த பஞ்சமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த பூஜையை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்குமாம். அதனை கண்டு
தரிசிக்க வேண்டும்.
கருடன் வருவதால் இந்த பூஜைக்கு கருட பஞ்சமி விரதம் என்று பெயர் வந்தது.
இந்த
விரதம் இருப்பவர்கள் கருட தரிசனம் கண்ட பின்னர் தான் விரதத்தை முடிக்க
வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள்
ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை
முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். அன்னதானம்
வழங்கலாம்.
No comments:
Post a Comment