வாழ்க்கை பின்பற்றுவது சில முறைகள்
குளியல்:
ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும்.
பல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.
குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் “கூழானாலும் குளித்து குடி” என்று சொன்னார்கள்.
ஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ,
நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு
நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு
புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்கள். அது மிகவும் அதிகமான
தோஷத்தை கொடுக்கும். காலையிலேயே குளித்து விட வேண்டும்.
இன்னும் பல குடும்பங்களில், “இப்பவே குளிச்சிட்டு என்னத்த கிழிக்க
போறீங்க?” என்று பாச மழை பொழியும் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பல
ஆண்கள் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.
செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் – புதன் கிழமையன்றும், சனிக்கிழமையன்றும்
பெண்கள் – செவ்வாய்க்கிழமையன்றும், வெள்ளிக்கிழமையன்றும்
நல்லெண்ணைக்கு பதிலாக வேப்பெண்ணையை தேய்த்து குளிக்கலாம்.
No comments:
Post a Comment