Saturday, 3 March 2012

ஷிர்டி  சத்குரு சாய் மகராஜ்

 





மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ரி எனும் கிராமத்தில் கங்கா கவாடியா - தேவகிரி என்ற இந்து தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார் பாபா. பாபா பிறந்த போது அவரது தந்தை இறைவனின் தரிசனத்திற்காக காட்டில் தவம் செய்ய புறப்பட்டார். இவர் சென்றதும் தேவகிரி பிறந்த குழந்தையை நடுக்காட்டில் விட்டு விட்டு கணவன் பின் சென்று விட்டார். அப்போது காட்டு வழியே வந்த பாட்டீல் என்ற முஸ்லிம் தம்பதியினர் குழந்தையின் அழுகுரலை கேட்டு அந்த குழந்தையை எடுத்து வளர்த்தனர். சிறுவயாதான அந்த பாபாவின் செயல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. தர்காவிற்கு செல்லும் அவன் சிவலிங்கத்தை வைத்து  கீதை, வேதம், உபநிஷதங்கள் சொல்வான். சில சமயம் இந்து கோயிலுக்கு சென்று குரான் ஓதுவான். இதனால் இந்துக்களும், முஸ்லிம்களும் பாபாவை வெறுக்க தொடங்கினர்.ஒரு முறை பாபா தன் பக்கத்து வீட்டு மாமி பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தன் வீட்டு பூஜையறையில் வைத்திருந்த சாளக்கிராம உருண்டையை பந்தயப் பொருளாக வைத்து விளையாடி பாபாவிடம் தோற்றான். இதையறிந்த மாமி பாபாவை அரட்ட, பாபா சாளக்கிராமத்தை தன் வாயில் போட்டு விட்டான். வாயை திறந்தான். அப்போது கண்ணனின் வாயில் யசோதை கண்ட காட்சியை பாபாவின் வாயில் மாமி பார்த்தாள். மயங்கி விழுந்தாள். சில நாட்களில் பாட்டீல் இறந்து போனார். அதன்பின் அவ்வூர் வெங்கடாசலபதி பக்தரான கோப்லராவ் அவனை வளர்த்தார். பத்தாண்டுகள் வரை அவரிடம் வளர்ந்த பாபா பள்ளிக்கு செல்வில்லை.
கோபால் ராவிடமே பலவிஷயங்களை கற்று கொண்டார். இஸ்லாமிய, இந்து மத பிரார்த்தனைகளை மேற்கொண்டார்.           கோபால்ராவின் கடைசி காலம் நெருங்கி விட்டது. எனவே தனது தெய்வீக சக்திகளை பாபாவிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டு உயிர் துறந்தார். ஏழு ஆண்டுகள் கழிந்தன. புனேயிலிருந்து 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஷிர்டி என்னும் கிராமத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இளைஞனாகத் தோன்றினார் பாபா. இவரது சக்தி குறித்து அக்கிராம மக்கள் நெரிந்து கொண்டனர். ஒரு முறை சாந்த்படேல் என்பவர் தன் அண்ணன் மகன் திருமணத்திற்கு பாபாவை அழைத்து சென்றார். அங்குள்ள கந்தோபா சிவன் கோயில் பூஜாரி தன்னை மறந்து ஆவோ சாயி (சாயியே வருக) என அழைத்தார். திருமணம் முடிந்ததும் அனைவரும் ஊர் திரும்பி விட்டனர். ஆனால் பாபா அங்கேயே தங்கி விட்டார். அதுவரை பக்ரி என அழைக்கப்பட்ட அவர் பாபா என்றும் சாய் என்றும் அழைக்கப்பட்டார். அவ்வூரில் இருந்த மசூதியில் தான் பாபா தங்கினார். மூன்று ஆண்டுகளில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார் (இந்த இடத்தில் தான் பாபாவின் புனித சமாதி உள்ளது). ஒரு முறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமாக எண்ணெய் தரும் வியாபாரி எண்ணெய் தர மறுத்துவிட்டதால் தண்ணீரிலேயே விளக்கெரிய வைத்தார். அன்று முதல் அவரது புகழ் மேலும் பரவியது. ராமநவமி, சந்தனக்கூடு ஆகிய இந்து முஸ்லிம் விழாக்களை இவ்வூரில் நடத்தி வந்தார். இந்து சடங்குகள் அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது. அவரை இந்துவா, முஸ்லிமா என் யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மசூதியை பாபா துவாரகா மயி என அழைப்பார். துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார். ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத் நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும். உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும். மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார். சத்குரு சாய் மகராஜ் எனப்பட்ட பாபா 1918 விஜயதசமி தினத்தன்று முக்தியடைந்தார்.


ஆன்மிக துளிகள்.








குபேரன் - தீபாவளி




          தீபாவளிப் பண்டிகையின் போது வட இந்தியாவில் பலர் ஸ்ரீலக்ஷ்மியுடன் குபேரனையும் பூஜிக்கிறார்கள். குபேரனின் பூஜை அநேகமாக அக்டோபர் 15 தேதியிலிருந்து நவம்பர் 15 தேதிக்குள் ஐப்பசி மாதம் வரும், அதுவும் வியாழன்று பூசம் நக்ஷத்திரம் சேர்ந்தால் மிகச்சிறந்த நாளாகச் சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டிலும் லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை, யந்திரத்துடன் சில ஆன்மீகக் கடைகளில் கிடைக்கிறது. 
 
        குபேரன் செல்வத்திற்கு அதிபதி. திருப்பதி வெங்கடாசலபதியே தன் திருமணத்திற்குக் குபேரனிடமிருநது கடன் வாங்கிக் கொண்டார் என்று புராணம் கூறுகிறது. 

       இவர் ஒரு யக்ஷன் என்றும் வைஸ்ரவாவின் மகன் என்றும் தெரிய வருகிறது. இவருடைய மாற்றாந்தாய்க்குப் பிறந்தவர் தான் இராவணன். இவருடைய தாத்தா புலஸ்தியர் பிரும்மாவின் புத்திரர். முத்லில் இலங்கைக்கு அதிபதியாக இருந்தவர் குபேரனே.
        குபேரனின் விமானம் பறக்கும் போது தங்கம், முத்து போன்றவைகளைச் சிதறியபடியே செல்லுமாம். இராவணன் குபேரனை நாட்டை விட்டு விரட்டியப்பின் குபேரன் சிவனை நோக்கிக் கடும்தவம் புரிந்தார். அவரின் தவத்தை மெச்சி சிவனும் பார்வதியுடன் காட்சி கொடுத்தனர். பார்வதியின் அழகில் ஒரு நிமிடம் மயங்கி "ஆஹா, என்ன அழகு! இத்தனை அழகான தேவியைப் பார்த்ததேயில்லை" என்று கண் சிமிட்டினார் குபேரன். இதை எதிர்ப்பார்க்காத பார்வதி கோபத்துடன் அந்தக் கண்ணை வெடிக்கச் செய்தாள்.
ஒரு கண் போன பின் குபேரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க அந்த இடத்தில் ஒரு சிறிய கண்ணைக் கொடுத்து பார்வதி குபேரனை மன்னித்தாள். அவருடைய சிவ பூஜை, கடும் தவம் காரணத்தினால் அவரை அஷ்டதிக்குக் காவலர்களில் ஒருவராகவும் நியமித்தார். இவர் வடக்கு திசைக்கு அதிபதி. லக்ஷ்மி தேவியும் குபேரனை தனதான்யத்திற்கு அதிபதியாக்கி அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்தாள் .
            குபேரனைச் சித்திரங்களில் குள்ளமாகவே காண்கிறோம் சிவந்த நிறம். பெரிய தொந்தி, அணிந்திருக்கும் உடை முழுவதும் தங்கத்தினால் ஆனதாம். உடல் முழுவதும் ஆபரணங்கள், கையிலே காசுகள் நிரம்பிய ஒரு பை, மற்றொரு கையில் கதை. புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை 'சர்வானுபூதி" என்று வழிபடுகின்றனர். இவர் கையில் மது நிரம்பிய கலசம் இருக்குமாம்.
குபேரனின் சரித்தர ஆய்வில் சில இடங்களில் அவருக்கு மூன்று கால்களும், எட்டு பற்களும் ஒற்றைக் கண்ணும் கொண்டவராக இருக்கிறாராம். இவருக்கு வாகனமாக ஒரு மனிதனே இவரைத் துக்கியபடி இருக்கிறான்.
          அக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.
         சில திபெத்திய சித்திரங்களில் கீரிபிள்ளையுடன் இவர் காணப்படுகிறார். கீரி குபேரனின் வெற்றிச் சின்னம் என்று திபெத்தியர்கள் கூறுகிறார்கள். சீனாவின் வாஸ்துவில் சிரிக்கும் புத்தா என்ற பெயரில் தொந்தியும் தொப்பையுமாக சிரித்த முகத்துடன் ஒரு சிலை கிடைக்கும் இந்தப் பொம்மைச் சிலை பலவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பணம் மடியில் கொட்டும் ஒன்றில் தன் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டிருப்பது போல இருக்கும். இதுவும் குபேரன் தான் என்று சிலர் சொல்கிறார்கள். பல வியாபார ஸ்தலங்களிலும் சில வீடுகளிலும் இவர் வடக்கு திசையில் அலங்காரப் பொருளாக அமர்ந்திருந்தாலும் அதிருஷடம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கையும் அதில் சேர்ந்திருக்கும். குபேரனின் அருள் பெற்றால் நல்ல மனோபலம் செல்வம். வளம் வியபாரத்தில் லாபம் என்று பல நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்.
     குபேரனின் படத்துடன் லக்ஷ்மியையும் சேர்த்து குபேர யந்திரத்துடன் 48 நாள் பூஜிக்க பணம் கொட்டும். குபேரனுக்கென்று மிகவும் ஒரு சில கோயில்கள் தான் உண்டு. இதில் ரத்னமங்கலம் என்ற இடத்தில் குபேரனுக்குக் கோயில் ஒரு கோயில் காண முடிகிறது. இது மிகப்பழமையான கோயில். சுமார் ஐநூறிலிருந்து ஆயிரம் வருடம் பழமையானதாக இருக்கலாம். இங்கு லக்ஷ்மி குபேரனுக்கு தீபாவளியின் போது சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்தக் கோயிலில் எங்குத் திரும்பினலும் ரூபாய் நோட்டினால் மாலைகள் தோரணங்கள் என்று அலங்கரிக்கப்பட்டு குபேரனின் செல்வ வளத்தைக் காட்டுகிறது. கூட்டம் க்யூவைப் பார்த்தால் பாம்பு போல் வளைந்து நீண்டு போகிறது. பொறுமையுடன் நின்றால் மிக அழகான குபேர தரிசனம் கிடைக்கும்.
அங்குப் போனவுடன் நூறு ரூபாய்க்குச் சீட்டு வாங்கினால் ஒரு முறத்தில் பச்சைத்துணி, பூஜைப்பொருட்கள், ஒரு விளக்கு, லக்ஷ்மி குபேர படம் எல்லாம் கிடைக்கும். இத்துடன் மேலே நடக்க ஒரு மீன் குளம் வரும். அந்த்க் குளத்தில் இருக்கும் மீன்கள் 'வாஸ்து' மீன்களாம். அந்த மீன்கள் வீட்டிற்கு நல்லது செய்யும் என்று நம்பப்படுகிறது. அந்தக் குளத்தின் அருகில் ஆதிசங்கரர் அமர்ந்து அருள் புரிகிறார்.
           பின் நாம் பார்ப்பது கண்திருஷ்டி விநாயகர்.
"ஏ பிள்ளையாரப்பா! உன் அருள் கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தபடியே மேலே நடந்தால் வலது பக்கம் நவக்கிரஹங்கள் இடது பக்கம் பாதாள குபேர லிங்கம் என்று காண முடிகிறது. பாதாள குபேர லிங்கத்திற்குள் குனியாமல் நுழைந்தால் நம் தலையைப் பதம் பார்த்து விடும். பின் வருவது ஆஞ்சநேயர். இவைகள் எல்லாம் பார்த்த பின் விளக்கு ஏற்றும் இடம் வர அங்கு நெய்விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
       முக்கிய சன்னதியான குபேர சன்னதிக்குப் போக அங்கு குபேரன் தங்க உடைகள் அணிந்து ஜவலிக்கிறார். அவர் மேல் ரூபாய் நோட்டினல் மாலைகள் அலங்கரிக்கின்றன. குபேரனின் மனைவி ரித்தியும் கூட அமர்ந்து அருள் புரிகிறாள்.    குபேரன் சன்னதியை நெருங்க அர்ச்சகர் தட்டில் ஐந்து ரூபாய் காசுகள் தனித்தனியாக எடுத்து கைநிறைய அள்ளியது போல் போடவேண்டும். அர்ச்சகரும் தீபாராதனைக் காட்டிவிட்டு ஒரு சிரிக்கும் புத்தாவும் laughing buddha. ஒரு ரூபாய் காசும் நமக்கு தருகின்றன. அதுவே நமக்குக் கிடைக்கும் பிரசாதம். இது சில வருடங்கள் முன் நடந்த விவரம், தற்போது சில மாறுதல்கள் வந்திருக்கலாம்
பின் சுற்றுப்பிரகாரத்தில் நாம் பார்ப்பது வெங்கடாசலபதி, ஸ்வரண ஆகர்ஷண பைரவர் பிரும்மா சரஸ்வதியுடன், ஐய்ப்பன், முருகன், அருகே ஒரு கோசாலாவையும் காணலாம்.
        வண்டலூரிலிருந்து சுமார் ஏழு கி.மீ. தூரம் சென்றால் இந்த லக்ஷ்மி குபேரர் கோயிலை அடையலாம். இநநாளில் குபேரன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.  


ஆன்மிக துளிகள்.





கடன்  நிவர்த்தி ஆக

 

   லக்ஷ்மி நரசிம துதி படிப்பு குறைவாக  உள்ளவர்கள் தினமும் கிழ்க்கண்ட மந்திரத்தை    9  முறை  என  90 நாள்  சொல்லிவர  கடன் நிவர்த்தி ஆகும் 

   " லக்ஷ்மி  நரசிம  நான்  பட்ட கடன் அடைக்கயும் ,எனக்கு  வரவேண்டிய  தொகை  வரவும்  அருள்புரி  வேண்டுகிறேன் " .  





Thursday, 1 March 2012

ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க 



  • மிதுன லக்கனத்தில் ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களுக்கு  லக்ன தோஷம் உண்டு .
  • ரிசபம்  லக்கனத்தில் திங்கள் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
  • கும்பம்   ,கன்னி  லக்கனத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
  • மேஷம்  ,கடகம்  லக்கனத்தில் புதன் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
  • துலாம் ,மகர லக்கனத்தில் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
  • சிம்மம் ,மீன லக்கனத்தில் வெள்ளிக் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
  • விருசிகம்  ,தனசு  லக்கனத்தில் சனிகிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
இதற்காக  எளிய பரிகாரம் 

பரிகாரம் -1

லக்ன தோஷம் பரிகாரம் செய்யாமல்  இப்பொழுது  பெரியர்வர்கள் ஆகி      கஸ்டமஉள்ளவர்கள் ,உங்கள்  பக்கத்தில்  உள்ள  பெருமாள்  கோயிலக்கு 27 சனி கிழமை  சென்று  வர  தோஷம் நீங்கி  விடும் .

பரிகாரம் -2

லக்ன தோஷம் உள்ள குழந்தை  குலதெய்வ  கோயிலக்கு அழைத்து சென்று   குலதெய்வதுக்கு  எழுதி  வைக்கவேண்டும் . எந்த  கோயிலக்கு வேண்டுதல்  கடன்  செயவேர்களோ  அந்த  கோயில்   பேரிலே  அர்ச்சனை   செய்யவேண்டும் . இது  போன்று  செய்தல்  குழந்தை வாழ்கையில் பாதிப்பு வராது.
   











Saturday, 25 February 2012

பசு வழிபாடு 




முன்னும் பின்னும் முக அமைப்பு உள்ள பசு கன்று போடும் போது அதன் அமைப்பு முன்பின் முகம் கொண்டதாக இருக்கும் அந்த நிலமைலுள்ள பசுவை வலம் வந்து கும்பிட்டால் திருமண தடை அகன்று விடும் .நந்த சபதமிஅன்று பசுவை பூஜை செய்து வணகினால் சகல  தேவைதைகளின் அருள் கிடைக்கும்.
குடும்பம்   சிறக்க வீட்டு  நிலை  பூஜை
 



மாதம் ஒரு  முறை  வெள்ளிகிழமை  அல்லது  சித்திரை   மாதம்  10 தேதி  , வைகாசி  மாதம்  21 தேதி , ஆடி மாதம் 6 ,  ஐபசி  மாதம் 11, கார்த்திகை  மாதம் 8 , தை  மாதம் 12 , மாசி  மாதம் 22 இந்த  நாளில்  பிரமமுகுர்த்தம் நேரத்தில்  விடியற்காலை  மணி  3 இருந்து  5 குள்  நிலை பூஜை செய்ய அஷ்டலக்ஷ்மி தங்கி  வசம்  புரிவாள் .






 

Thursday, 23 February 2012

பௌர்ணமியின் சிறப்பு: 
 
பௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும்.
அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்.'
தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி-ஸ்ரீமுருகர் திருமணம் நடப்பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை.
மேலும் பஞ்சகோசங்களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோசமும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி-பரமேஸ்வர வழிபாட்டினாலும், "நமசிவாய' என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெருமளவு நலம் சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறலாம்.


அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது. 


மேலும் பௌர்ணமி திதி என்பது வளர்பிறை திதி ஆகும் அதன் பின் வரும் பிரதமை திதி முதல் அம்மாவசை வரை தான் தேய்பிறை திதி ஆகும் .
Seriale online